பஞ்சாயத்து தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றுவதை தடுத்தால் கிரிமினல் வழக்கு

பஞ்சாயத்து தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றுவதை தடுத்தால் கிரிமினல் வழக்கு
X

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பஞ்சாயத்து தலைவர்கள் தேசியக் கொடியேற்றுவதை, தடுப்பவர்கள் மீது கிரிமினில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பஞ்சாயத்து தலைவர்கள் தேசியக் கொடியேற்றுவதை, தடுப்பவர்கள் மீது கிரிமினில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், 75வது சுதந்தி தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தேசம் சுதந்திரம் அடைந்ததன் பெருமிதத்தை அனைவரும் உணரும் வகையில் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏறி கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளது.

நாளை ஆக.15ம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், தேசியக் கொடியேற்றப்பட்டு, சுதந்திர தின விழா கொண்டாடப்பட வேண்டும். கிராம பஞ்சாயத்துக்களில் பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றியங்களில், ஒன்றியத்தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவர் மட்டுமே தேசியக் கொடியினை ஏற்றி உரிய மரியாதை செலுத்த வேண்டும். அவர்களுக்கு பதிலாக வேறு எவரேனும் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினராக உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதை தடுக்கும் விதமாக, யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறை மூலம் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். கிராம பஞ்சாயத்துக்களில் தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பாக பிரச்சனைகள் இருந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 அல்லது ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் செல்போன் நம்பர் 7402606854 மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!