ரிக் வாகன கடனுக்கான தவணை செலுத்துவதை ஓராண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும் -ரிக் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
நிதி நிறுவனங்களிடம் இருந்து ரிக் வாகனங்களுக்கு பெற்ற கடனுக்கான தவனைத்தொகை செலுத்துவதை ஓராண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று சங்கத்தினர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து திருச்செங்கோட்டில் அகில இந்திய ரிக் வாகன உரிமையாளர்கள் சங்க தலைவர்சோனி குணசேகரன் கூறியதாவது:
தமிழகத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரிக் வாகனங்கள் உள்ளன. இந்தியா முழுவதும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பல தொழிற்சாலைகள், வணிகள் நிறுவனங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான ரிக் வாகனங்கள் வேலை வாய்ப்பின்றி ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போர் வெல் தொழில் நடக்கும் 6 மாதங்கள் ஊரடங்கு காலமாக அறிவிக்கப்பட் டதால், இந்த தொழில் மேலும், பாதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ரிக் வாகனமும் ரூ.1 கோடிக்கு மேல் முதலீடு செய்யும்போது, பேங்க் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று, வாகனங்களை வாங்கி இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது போர்வெல் வாகனங்கள் ஓடாததால், வருமானம் இல்லை. இதனால் நிதி நிறுவனங்களின் பெற்ற கடனுக்கான இஎம்ஐ தவனையை திருப்பிச்செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு இது குறித்து நடவடிக்கை எடுத்து கடன் தவனை செலுத்தும் காலத்தை அபராத வட்டியில்லாமல் ஓராண்டிற்கு நீட்டிக்க வேண்டும். மேலும், கடந்த ஓராண்டில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளது. இதனால் ரிக் தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டு தொழிலை நடத்த மிகவும் சிரமமாக உள்ளது. எனவே டீசல், பெட்ரோல் விலையை குறைத்து, அதை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். விவசாய பணிகளுக்காக அதிக அளவில் போர்வெல் அமைப்பதால், விவசாயத்திற்கு வழங்குவது போல், போர்வெல் வாகனங்களுக்கான டீசலுக்குமானியம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu