கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு சிறப்பு முகாம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின்  குடும்பத்தினருக்கு சிறப்பு முகாம்
X

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு முகாம நடைபெற்றது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகம் இணைந்து நடத்திய கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கான சிறப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா தலைமை வகித்தார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலர் மோகனசுந்தரம், தாட்கோ மேலாளர் சரவணன், மகளிர் திட்ட உதவி அலுவலர் மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர். முகாமில் கலந்து கொண்ட 93 பேர் போட்டித் தேர்வுகள், திறன்பயிற்சி, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறவும், தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறவும் பதிவு செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!