நாமக்கல் மாவட்டத்தில் இன்று 45 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 45 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
X
நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு 45 பேர்: மொத்தம் பாதிப்பு 53,404 பேர்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரு நாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 பேர். மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,404 ஆக உயர்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், சேந்தமங்கலம், காளப்பாநாய்க்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், குமாரபøõளயம், வெப்படை, திருச்செங்கோடு, பெரியமணலி, மோகனூர், என்.கொசவம்பட்டி, கீரம்பூர், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் நாமக்கல், சேலம், திருச்செங்கோடு, ஈரோடு, பள்ளிபாளையம், கொமாரபாளயைம், ராசிபுரம், பெருந்துறை, கோவை, கரூர், உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 53,404 ஆக உயர்ந்துள்ளது. இன்று 33 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 52,447 பேர் சிகிச்சை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 451 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 506 ஆக உள்ளது.

Tags

Next Story
ai in future agriculture