நாமக்கல் மாவட்டத்தில் 60 பேருக்கு கொரோனா தொற்று
பைல் படம்
நாமக்கல் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், சேந்தமங்கலம், காளப்பாநாய்க்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், வெப்படை, திருச்செங்கோடு, பெரியமணலி, மோகனூர், என்.கொசவம்பட்டி, கீரம்பூர், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்கள், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பெருந்துறை, கோவை, ஈரோடு, கரூர், சேலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47,065 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 45 பேர் சிகிச்சை குனமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 46,075 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 546 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று கொரோனாவால் ஒருவர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் உயிரழந்தோர் எண்ணிக்கை 444 ஆக உயர்ந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu