நாமக்கல்லில் 28-ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் 28-ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
X
Today Meeting -நாமக்கல்லில் வருகிற 28-ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

Today Meeting -நாமக்கல்லில் வரும் 28ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் சமையல் கேஸ் உபயோகிக்கும் நுகர்வோர் நலன் கருதி, அனைத்து கேஸ் கம்பெனி டீலர்கள், விநியோகஸ்தர்கள், சமையல் கேஸ் நுகர்வோர், தன்னார்வர்லர்கள் ஆகியோருடன், சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வருகிற 28ம் தேதி, மாலை 3 மணிக்கு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. டி.ஆர்.ஓ. கதிரேசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். சமையல் கேஸ் விநியோகம் சம்மந்தமானக குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai in future agriculture