நாமக்கல் மாவட்ட தமிழ்த்துறை பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவருக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்ட தமிழ்த்துறை பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவருக்கு பாராட்டு
X

தமிழ்த்துறைப் பேச்சுப்போட்டியில் பரிசுபெற்ற, நாமக்கல் அரசு கல்லூரி மாணவர்களை, கல்லூரி முதல்வர் முருகன் பாராட்டினார்.

நாமக்கல் மாவட்ட தமிழ்த்துறை பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்ற அரசு கல்லூரி மாணவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்ட தமிழ்த்துறை சார்பில் ஜவர்கலால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது.

இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாமக்கல் அண்ணா அரசு கல்லூரியில் பி.ஏ தமிழ் இலக்கியம் மூன்றாமாண்டு படிக்கும் மாணவர் மோகன்குமார் போட்டியில் பங்கேற்று மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றார்.

இரண்டாமாண்டு இளம் விலங்கியல் படிக்கும் மாணவி குணவதி காந்தி பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். இவ்விருவருக்கும் கலெக்டர் ஸ்ரேயா பரிசு வழங்கினார். பரிசு பெற்ற இருவரையும் கல்லூரி முதல்வர் முருகன் பராராட்டி பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத் தலைவர் நடராஜன், விலங்கியல் துறைப் பேராசிரியர் ராஜசேகர பாண்டியன், நுண்கலை மன்ற ஒருங்கினைப்பாளர் கந்தசாமி மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கல்குவாரி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலினின் நிவாரண அறிவிப்பு!