மும்மொழி கல்விக் கொள்கையை கண்டித்து நாமக்கல்லில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

மும்மொழி கல்விக் கொள்கையை கண்டித்து  நாமக்கல்லில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்
X

மும்மொழிக் கல்விக் கொள்கையைக் கண்டித்து, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் மும்மொழி கல்விக் கொள்கையைக் கண்டித்து நாமக்கல்லில் மாணவர் இயங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

மத்திய அரசின் மும்மொழி கல்விக் கொள்கையைக் கண்டித்து நாமக்கல்லில் மாணவர் இயங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில், நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் சத்தியசீலன் தலைமை வகித்தார். தொடர்ந்து மும்மொழிக் கொள்கையை எதிர்த்தும், தமிழகத்திற்கு கல்வி நிதியை ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. முன்னதாக மோகனூர் ரோட்டில், அண்ணா சிலை அருகில் இருந்து பிஎஸ்என்எல் அலுவலகம் வரை கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்களின் பேரணி நடைபெற்றது.

திமுக கிழக்கு மாவட்ட மாணவர் அணி, இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு, சமூக நீதி மாணவர் இயக்கம், முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு, மதிமுக மாணவரணி, தமிழ் மாணவர் மன்றம் போன்ற அமைப்புகளைச் சேரந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Next Story