ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து நாமக்கல்லில் நாளை அச்சகங்கள் முழு அடைப்பு

ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து நாமக்கல்லில் நாளை அச்சகங்கள் முழு அடைப்பு
X

பைல் படம்

அச்சு காகிதத்திற்கு ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், நாமக்கல்லில் நாளை அச்சங்கள் முழு அடைப்பு.

அச்சு காகிதத்திற்கு ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், நாமக்கல் மாவட்டத்தில் நாளை அச்சங்கள் முழு அடைப்பு செய்யப்படும்.

அச்சகங்களுக்கு தேவையான காகிதம், அச்சு மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி வரி 12 சதவீத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாஸ்டர் பிரிண்டர்ஸ் பெடரேசன் சார்பில், மத்திய அரசிடம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 14ம் தேதி சென்னையில், வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேலும், நாளை மாநிலம் முழுவதும் உள்ள அச்சகங்கள் முழு அடைப்பு செய்யப்படுகிறது.

சென்னையில் நடக்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், அச்சக உரிமையாளர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் கலந்து கொள்றும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அச்சகங்கள் அனைத்தும், நாளை 14ம் தேதி ஒரு நாள் முழு அடைப்பு செய்யப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future