புதுச்சத்திரம் ஒன்றியத்தில் ரூ.45லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி துவக்கம்

புதுச்சத்திரம் ஒன்றியத்தில் ரூ.45லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி துவக்கம்
X

புதுச்சத்திரம் ஒன்றியத்தில் புதிய ரோடு அமைக்கும் பணிகளை, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

புதுச்சத்திரம் ஒன்றியத்தில் ரூ.45லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

புதுச்சத்திரம் ஒன்றியத்தில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரோடு அமைக்கும் பணியை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

புதுச்சத்திரம் ஒன்றியம் நாட்டாமங்கலத்தில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியின் மூலம் நாட்டாமங்கலம் முதல் ஏளூர் - குருசாமிபாளையம் சந்திப்பு வரை ரோடு அமைக்கும் பணிக்கான பூமி பூஜை மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9.080 லட்சம் மதிப்பீட்டில் நவணி பஞ்சாயத்தில் அங்கன்வாடி மையக்கட்டிடம் திறப்புவிழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்கன்வாடி மையக் கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் ரோடு அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.

புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கவுதம், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் செந்தில், ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தி, துணைத் தலைவர் ராம்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் மனோகரன், முருகேசன், சின்ராசு, தரணிபாபு, கண்ணன், பஞ்சாயத்து தலைவர்கள் வரதராஜ், கிருஷ்ணன், சண்முகம், கஜேந்திரன், கந்தசாமி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story