நாமக்கல் மாவட்டத்தில் வரும் 23ம் தேதி 54 கிராமங்களில் வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்கம்

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்.
நாமக்கல் மாவட்டத்தில் வரும் 23ம் தேதி, 54 கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா நடைபெறுகிறது.
இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம், 2021-22-ம் ஆண்டில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படும், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் வருகிற 23-ம் தேதி, 15 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 54 கிராமங்களில் துவக்கப்படுகிறது. 23-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, வீடியோ கான்பரன்சிங் மூலம் திட்டத்தை துவக்கிவைக்கிறார். திட்டம் தொடங்கப்படும் கிராமங்களில் சம்மந்தப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu