தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் நினைவேந்தல்: ராஜேஷ்குமார் எம்.பி. பங்கேற்பு
பட விளக்கம் : தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன், 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல் அருகே உள்ள அவரது சிலைக்கு, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் நினைவேந்தல்: ராஜேஷ்குமார் எம்.பி. பங்கேற்பு
நாமக்கல்,
நாமக்கல் அருகே தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையம் கிராமத்தில் சுப்பராயன் - பழனியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் சுப்பராயன். இவர் 1929ம் ஆண்டு டிச. 22ம் தேதி பிறந்தார். 2019ம் ஆண்டு ஏப். 6ம் தேதி காலமாணார். இவர் சிறந்த தமிழ் அறிஞர், எழுத்தாளர் மற்றும் இலக்கிய பேச்சாளர். இவர் எழுதிய சிலம்பொலி, சங்க இலக்கியத் தேன், பெருங்கதை ஆராய்ச்சி உள்ளிட்ட பல புத்தகங்கள் மிகவும் சிறப்பு பெற்றவை. மேலும் இவர் கணித ஆசிரியராகப் பணியைத் துவக்கி, மாவட்டக் கல்வி அலுவலர், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர், தஞ்சாவூர் தமிழ் பல்கலை பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு அரசு பதவிகளில் திறம்பட பணியாற்றி உள்ளார்.
அவரது நினைவைப் போற்றும் வகையில், நாமக்கல் சேந்தமங்கலம் ரோட்டில் சிவியாம்பாளையம் அருகில் அவருக்கு மணி மண்டபம் அமைத்து, அங்கு அவரது ஆள் உயர உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. indru அவரது 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நாமக்கல் லோக்சபா எம்.பி. சின்ராஜ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ, நாமக்கல் லோக்சபா தொகுதி கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன், பிஜிபி கல்வி நிறுவனங்களின் தாளாளர் கணபதி, திமுக பிரமுகர் பூங்கோதை செல்லதுரை உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் சிலம்பொலி செல்லப்பனின் மகன் கொங்குவேல் வரவேற்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu