மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
நாமக்கல்,
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
நாமக்கல் கலெக்டர் ஆபீசில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 555 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பரிசீலினை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து, உலக சிக்கன நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற, 8 மாணவ, மாணவியருக்கு, கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், 2023-24ம் நிதியாண்டில், சிறுசேமிப்பு திட்டங்களில் மாவட்ட அளவில் சிறப்பாக சேவையாற்றிய ஏஜெண்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 3 பேருக்கு, காதொலி கருவி, கண் கண்ணாடி, மடக்கு குச்சி, ப்ரெய்லி வாட்ச், தாங்கு கட்டை உள்ளிட்ட உலகரனங்களை கலெக்டர் வழங்கினார். தனித் துணை கலெக்டர் பிரபாகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu