மாவட்டத்தில் புதிய மினி பஸ்கள் இயக்கம் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

மாவட்டத்தில் புதிய மினி பஸ்கள் இயக்கம் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
X

புதிய மினி பஸ்கள் இயக்கம் குறித்து, நாமக்கல்லில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கலெக்டர் உமா பேசினார்.

நாமக்கல் மாவட்டத்தில் புதிய மினி பஸ்கள் இயக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஆபீசில் கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் புதிய மினி பஸ்கள் இயக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஆபீசில் கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.

தமிழக அரசு தமிழகம் முழுவதும் புதிய மினி பஸ்கள் இயக்குவதற்கான அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், அதிக குடியிருப்புகளைக் கொண்ட பகுதி மக்களுக்கு உதவும் வகையில், ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய விரிவான திட்டத்தின்படி தமிழகத்தில் மினி பஸ்களுக்கான திருத்தப்பட்ட கட்டண விகிதம் வருகிற மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. மேலும், அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, நாமக்கல் மாவட்டத்தில் மினி பஸ்கள் இயக்குதல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தனியார் அமைப்புகள், பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், மினி பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஆர்டிஓக்களுடன் இந்த ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட சப் கலெக்டர் பிரபாகரன், சிஇஓ மகேஸ்வரி, ஆர்டிஓக்கள் நாமக்கல் வடக்கு முருகேசன், தெற்கு முருகன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Next Story
பிரதோஷ நாயனார் 3 முறை தேர் வலம், பக்தர்கள் ஆராதனை