நாமக்கல்லை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்க கலெக்டர் வேண்டுகோள்

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், சிறுநல்லிகோயில் ஊராட்சியில் நடைபெற்ற, கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு துணிப்பைகளை கலெக்டர் உமா வழங்கினார்.
நாமக்கல்
நாமக்கல்லை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் வேண்கோள் விடுத்தார்.
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, சிறுநல்லிக்கோயில் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:
தமிழக அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மஞ்சப் பை திட்டத்தின் மூலம் நீர், நிலம், காற்று மாசுபாடு குறைத்து, பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். மஞ்சப்பை சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் அடையாளம் என்னும் வகையில், பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்த்துத் துணிப்பை மற்றும் பாத்திரங்கள் கொண்டு செல்லும் பழக்கத்திற்குப் பொதுமக்கள் அனைவரும் மாற வேண்டும். கழிவுகளை மக்கும் கழிவு, மக்காத கழிவு என பிரித்துத் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கும் பழக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
கழிவுகளை தீ வைத்து எரிக்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்ப்போம். முடிந்தவரை கழிவுகளை மறுசுழற்சிக்குப் பயன்படுத்துவோம். மக்கும் கழிவுகளை இயற்கை உரமாக மாற்றி பயன்படுத்துவோம். குளம், குட்டை, ஏரி போன்ற நீர்நிலைகளை தூர்வாரி அதில் தூய மழைநீர் சேமிப்போம். நாமக்கல் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பசுமை உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். முன்னதாக சிறப்பு கிராம சபை கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள், சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்து, பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை கலெக்டர் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu