செம்மொழி நாள் பேச்சு, கட்டுரைடுரைப் போட்டி 66 கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்பு

செம்மொழி நாள் பேச்சு, கட்டுரைடுரைப் போட்டி  66 கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்பு
X

பைல் படம்

நாமக்கல்லில் நடைபெற்ற செம்மொழி நாள் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டியில் 66 கல்லூரி மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

நாமக்கல்,

தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்று தந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெருமையைப் போற்றிடும் வகையில், அவர் பிறந்த நாளான, ஜூன் 3ம் தேதி, தமிழக அரசு சார்பில், ஆண்டு தோறும் செம்மொழி நாள் விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர், கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வரும், ஜூன் 3ம் தேதி நடக்கும் செம்மொழி நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இதையொட்டி, நாமக்கல்லில் ஏற்கனவே, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான, பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் பாரதி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கோவிந்தராசு போட்டிகளை துவக்கி வைத்தார். அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் போட்டிகளில் பங்கேற்றனர். பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டியில், தலா 33 பேர் வீதம், மொத்தம் 66 மாணவ, மாணவியர் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு, முறையே ரூ. 10,000, 7,000, 5,000 வீதம் பரிசு வழங்கப்படும். முதல் பரிசு பெறுபவர், வரும் 17ம் தேதி, சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளலாம்.

Next Story