கோழிமுட்டை கழிவுகள் பொது இடத்தில் வீச்சு:: லாரி டிரைவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

கோழிமுட்டை கழிவுகள் பொது இடத்தில் வீச்சு:: லாரி டிரைவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
X

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், கோழி முட்டை கழிவுகளை, பொது இடத்திய கொட்டிய லாரி டிரைவருக்கு. நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார்.

நாமக்கல் பகுதியில், கோழிக்கழிவுகளை சாலையோரம் கொட்டிய கோழிப்பண்ணை லாரி டிரைவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் கோழிக்கழிவுகள், அழுகிய முட்டைகள், காலாவதியான தீவண மூலப்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களை ரோட்டோரம் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இது அப்பகுதியில் வசிப்பவர்களுக்கும், அவ்வழியாக செல்பவர்களுக்கும் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில் நாமக்கல்-திருச்செங்கோடு ரோட்டில் இருந்து வள்ளிபுரம் செல்லும் பைபாஸ் சர்வீஸ் ரோட்டில், கருப்பட்டிபளையம் அருகே ரோட்டோரம், ஒரு லாரியில் இருந்து கோழி முட்டை கழிவுகளை கொட்டிக்கொண்டிருப்பதாக, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்கிற்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கலெக்டரின் உத்தரவின்பேரில், நாமக்கல் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியம் சம்பவ இடத்திற்கு சென்று கோழி முட்டை கழிவுகளைக் கொட்டிக்கொண்டிருந்த, தனியார் கோழிப்பண்ணைக்கு சொந்தமான லாரியை மடக்கிப்பிடித்து, அதன் டிரைவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார். பின்னர் கோழிப்பண்ணையாளர் உரிமையாளருக்கு, கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!