சென்னை - போடி எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை!

சென்னை - போடி எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை!
X
சென்னை - போடி எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல்,

சென்னையில் இருந்து போடிநாயக்கனூர் வரை இயக்கப்படும் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று ரயில் பயணிகளும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வண்டி எண். 20601/20602 சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல் வழியாக செல்கிறது. இந்த ரயில் நாமக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுமார் 5 ஆண்டுகளாக நாமக்கல் பகுதி ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆனால் கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை. தற்போது நாமக்கலில் இருந்து சென்னை சென்று வர 22651/22652 சென்னை சென்ட்ரல் - பாலக்காடு - சென்னை சென்ட்ரல் தினசரி ரயில் மற்றும் 12689/12690 சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் வாரந்திர ரயில் ஆகிய 2 ரயில்கள் மட்டுமே உள்ளன. இந்த ரயிலில் முன்பதிவு டிக்கட்டுகள் கிடைப்பதில்லை.

நாமக்கல் பகுதி லாரிகள், கோழிப்பண்ணைகள் உள்ளிட்ட முக்கிய தொழில் நகரமாகவும், பல்வேறு பள்ளி கல்லூரிகள் இங்கு நிறைந்திருப்பதாலும், பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்திருப்பாதலும் தினசரி ஆயிரக்கணக்கானவர்கள் நாமக்கல்லில் இருந்து சென்னை சென்று வந்துகொண்டுள்ளனர். சென்னை செல்ல போதிய ரயில் வசதி இல்லாத காரனத்தால் நாமக்கல் - சென்னை இடையே 50 க்கும் மேற்ப்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பலர் இங்கிருந்து சேலத்திற்கு பஸ்சில் சென்று சேலம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது.

எனவே, வண்டி எண். 20601/20602 சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூர் - சென்னை சென்ட்ரல் ரயிலுக்கு நாமக்கல் நிறுத்தம் வழங்க வேண்டுமென கடந்த 5 ஆண்டுகளாக பல முறை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்களிடமும், மத்திய அமைச்சரிடமும் கோரிக்கை வைத்தும் இதுவரை இந்த ரயில் நின்றுசெல்லவில்லை. சேலம் ரயில்வே கோட்ட மேலாளர், தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் ஆகியோரிடமும் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை நடைபெற்ற சேலம் கோட்ட அளவில் எம்.பிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில், இந்த ரயிலுக்கு நாமக்கல் நிறுத்தம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதுவும் நிறைவேறவில்லை. எனவே சென்னை - போடி ரயில், மாவட்ட தலைநகரான நாமக்கலில் நின்று செல்ல விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நாமக்கல் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!