அரசு நிர்ணயித்த விலையில் சிமென்ட் : பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை

அரசு நிர்ணயித்த விலையில் சிமென்ட் : பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை
X

தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததராரர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டத்தில், மாநிலத் தலைவர் சுதர்சன் பேசினார்.

அரசு பணிகளுக்கு நிர்ணயித்த விலையில் சிமென்ட் வழங்கவேண்டும் என பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசு ஒப்பந்த பணிகளுக்கு, அரசு ஒப்பந்தத்தில் நிர்ணயித்த விலையில் சிமென்ட் வழங்கவேண்டும் என தமிழ்நாடுபொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட சங்க தலைவர் மகேந்திரன் வரவேற்றார். இதில் மாநில தலைவர் சுதர்சன் பங்கேற்று பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழகத்தில் பேக்கேஜ் டென்டர் முறையை நீக்கியது மற்றும் ஒப்பந்ததாரர்கள் பதிவை பதிவு செய்தல் மற்றும் பதிவை புதுப்பித்தல் ஆகியவற்றை இனி வரும் காலங்களில் அந்தந்த பொதுப்பணித்துறை மண்டல தலமை பொறியாளர் அளவிலேயே செய்து கொள்ள அரசு உத்தரவை வழங்கிய தமிக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஒப்பந்த பதிவு புதுப்பித்தலை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என மாற்றியமைத்த அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஒப்பந்த பதிவு முதல் வகுப்பிற்கு ரூ. 5 கோடிக்கு மேல் எனவும் அதற்கான சாஸ்வன்சியை 10 சதவீதம் என அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.

அரசு ஒப்பந்த பணிகளுக்கு, அரசு ஒப்பந்தத்தில் நிர்ணயித்த விலையில் சிமென்ட்டை வழங்கவேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் நாமக்கல் மாவட்ட சங்க செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story