புதுச்சத்திரம் அருகே தண்ணீரில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு

புதுச்சத்திரம் அருகே தண்ணீரில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு
X

பைல் படம்.

புதுச்சத்திரம் அருகே தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள உடையார்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகன் பிரவீன்குமார் (19), கூலித்தொழிலாளி. இவர் புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சியில் நடந்த கோயில் திருவிழாவிற்காக உறவினர் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்குள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்த கிணற்றில் நீச்சல் பழகுவதற்காக நண்பர்கள் 2 பேருடன் சென்றார். பின்னர் அங்கு கிணற்றில் இறங்கி குளித்த போது பிரவீன்குமார் திடீரென தண்ணீரில் முழ்கிவிட்டார்.

தகவல் கிடைத்ததும் ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி போராடி பிரவீன்குமாரின் இறந்த உடலை மீட்டனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story