கச்சத்தீவை பாஜக மீட்டே தீரும்: மாநில துணைதலைவர் பேச்சு

கச்சத்தீவை பாஜக மீட்டே தீரும்: மாநில துணைதலைவர் பேச்சு
X

நாமக்கல் மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேசினார்.

கச்சத்தீவை பாஜக மீட்டே தீரும் என்று மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறினார்.

கச்சத்தீவை பாஜக மீட்டே தீரும் என்று மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறினார்.

நாமக்கல் மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்சந்தையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கட்சியின் மாநில துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, டாக்டர் கே.பி ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். கோட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு கட்சிப்பிரமுகர்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். கூட்டத்தில், மாநில துணைத்தலைவரும், முன்னாள் சட்டசபை துணை சபாநாயகருமான துரைசாமி பேசியதாவது:

கச்சத்தீவை மீட்கும் முயற்சியில் பாஜக வெற்றி பெற்றே தீரும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள்நாள்தோறும் நடக்கின்றன. போலீஸ் நிலையத்தில் லாக் அப் மரணங்கள் அதிகரித்துள்ளன. பெண்கள் மீதான வன்முறைகள் பெருகி வருகின்றன. இவற்றை திமுக அரசு தடுக்க தவறிவிட்டது. பாஜக வருங்காலங்களில் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கும் வகையில் கட்சியினர் ஒற்றுமையாக இருந்து, இனிவரும் தேர்தல்களில் வெற்றி பெற பாடுபட வேண்டும். தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி அமைந்து பார்லி தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு பாஜகவினர் கடுமையாக பாடுபட வேண்டும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் 2024 சாத்தியப்படும் என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பாஜக மாநில மருத்துவர் அணி தலைவர் பிரேம்குமார், நெசவாளர் அணி மாநிலத் தலைவர் பாலமுருகன், நாமக்கல் மாவட்ட பொதுச் செயலாளர்கள் முத்துக்குமார், நாகராஜன், புதுச்சத்திரம் மண்டல பார்வையாளர் சதீஷ், ஒன்றிய தலைவர் வடிவேல், முன்னாள் மாவட்ட தலைவர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா