நாமக்கல் ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கும் பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரம் இருந்து செல்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் சபரிமலை செல்ல முடியவில்லை. இந்த ஆண்டு சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தினசரி 50 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து சபரிமலைக்கு சென்று வரலாம். இண்டு தவனை கொரோனா தடுப்பூசி போட்டவர்கள், 24 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதணை செய்து அந்த சான்றிதழுடன் சபரிமலைக்கு செல்லலாம்.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு, நாமக்கல் ஐயப்பசாமி அறக்கட்டளை மூலம், இந்த ஆண்டும், மோகனூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1ம் தேதி முதல், மாலை போடுதல், இருமுடி கட்டுதல் ஆகியன தொடர்ந்து நடைபெறும். ஆன்லைன் புக்கிங் பெற்றவர்கள் மட்டும் மாலை அணிந்து , இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்லலாம் என்று அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu