நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஆவணி அவிட்டம் விழா: கோயில்களில் சிறப்பு பூஜை
ஆவணி அவிட்டம் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் அம்மன்.
தமிழகத்தில் ஆவணி அவிட்டம் மிகவும் சிறப்பு பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பவுர்ணி அன்று ஆவணி அவிட்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி அவிட்டம் என்று சொன்னாலே, பலருக்கும் இது பூணூல் மாற்றும் ஒரு நிகழ்வு என்று தான் முதலில் நினைவுக்கு வரும். பூணூல் அணியும் பழக்கம் உள்ளவர்கள், விடியற்காலையில் குளித்து அருகில் அல்லது ஏதேனும் ஒரு கோயிலில் ஒரு குழுவாக சேர்ந்து புரோகிதர் மந்திரம் சொல்ல பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து கொள்வார்கள்.
இதுமட்டுமல்லாமல், உபகர்மா என்று கூறப்படும் இந்த நிகழ்வு பிராமணர் சமூகத்தில் கல்வி கற்பதை தொடங்குவதற்கான ஒரு முக்கியமான நாளாகவும் கருதப்படுகிறது. தமிழ் மாதங்களின் அடிப்படையில், சூரியன், சிம்ம ராசியில் ஆட்சி பெற்று அமரும் ஐந்தாவது மாதமான ஆவணி மாதத்தில், பவுர்ணமி திதியில், அவிட்ட நட்சத்திர நாளன்று பூணூல் மாற்றிக் கொள்ளும் இந்தப்பண்டிகை சிறப்பானதாகும்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூர், எருமப்பட்டி, மோகனூர், பரமத்திவேலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் இன்று ஆவணி அவிட்டத்தைமுன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமானவர்கள் சாமி தரிசனம் செய்து பூணூல் மாற்றிக்கொண்டனர். சேந்தமங்கலம் தாலுக்கா கொண்டம நாயக்கன் பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள மூலவர் அம்மனுக்கு இன்று அதிகாலை சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu