தேசிய மூத்தோர் தடகளப்போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு

தேசிய மூத்தோர் தடகளப்போட்டியில் பதக்கம்    வென்ற வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு
X

தேசிய மூத்தோர் தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற நாமக்கல் மாவட்ட வீரர்களை, கலெக்டர் உமா பாராட்டினார்.

தேசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்ற, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 9 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கலெக்டர் உமா பாராட்டு தெரிவித்தார்.

நாமக்கல்,

தேசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்ற, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 9 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கலெக்டர் உமா பாராட்டு தெரிவித்தார்.

தேசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டி பெங்களூரில் 5 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாட்டு அணியின் சார்பில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தடகள வீரர் மற்றும் வீராங்கனைகள் ஈட்டி எறிதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் மற்றும் 4 இன்டூ 100 மீட்டர் ஓட்டப் போட்டி, உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த வீராங்கனை லீலாவதி ஈட்டி எறிதல் போட்டியில் 1 தங்க பதக்கம், குண்டு எறிதலில் 1 வெள்ளிப் பதக்கம், கருப்பையா குண்டு எறிதல் போட்டியில் 1 வெள்ளி பதக்கம், மோகன்ராஜ் உயரம் தாண்டுதல் போட்டியில் 1 தங்கப் பதக்கம், 5,000 மீட்டர் நடைபோட்டியில் 1 வெண்கலப் பதக்கம், அருள்மொழி 4 இன்டூ 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 1 தங்க பதக்கம், உயரம் தாண்டுதலில் 1 வெள்ளிப் பதக்கம், நீளம் தாண்டுதலில் 1 வெண்கலப் பதக்கம் மற்றும் குமார் தட்டு எறிதல் போட்டியில் 1 வெண்கலப் பதக்கம் ஆகியவற்றை வென்று சாதனைப்படைத்துள்ளனர். கலெக்டர் ஆபீசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் உமா, பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, மாவட்ட மூத்தோர் தடகள சங்க செயலாளர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் யுவராஜ் மற்றும் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story