நாமக்கல் - திருச்சி மெயின்ரோட்டில் மலைபோல் குவிந்துள்ள குப்பை மூட்டைகளால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நாமக்கல் - திருச்சி மெயின்ரோட்டில் மலைபோல் குவிந்துள்ள குப்பை மூட்டைகளால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
X

நாமக்கல் - திருச்சி ரோட்டில் மலைபோல் குவிந்துள்ள குப்பை மூட்டைகள்.

நாமக்கல் நகரில் திருச்சி மெயின் ரோட்டின் ஓரத்தில் குப்பை மூட்டைகள் மலைபோல் குவிந்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அதை சுத்தம் செய்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாமக்கல் நகரில் திருச்சி மெயின்ரோட்டில், மாநகராட்சி எல்லைக்கு அருகில் 2 சொகுசு ஓட்டல்கள் அமைந்துள்ளன. அதன் அருகில் மெயின் ரோட்டின் இடது புற ஓரத்தில் மூட்டை மூட்டையாக பாலிதீன் கவரால் கட்டப்பட்ட குப்பை மூட்டைகள் மெயின் ரோட்டின் ஓரத்தில் கொட்டப்பட்டுள்ளது. இந்த குப்பை மூட்டைகள் மலைபோல் குவிந்துள்ளது. அதில் உள்ள கெட்டுப்போன உணவுப் பொருட்களை தெருநாய்கள் இழுத்துச் சென்று ரோட்டில் போடுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியாக செல்வோர் மூக்கைப்பிடித்துக்கொண்டு செல்ல வேண்டி உள்ளது. அங்கு 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றுவதால் அடிக்கடி அவை ரோட்டைக் கடந்து செல்லும்போது விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த இடம் நாமக்கல் மாநகராட்சி - வகுரம்பட்டி பஞ்சாயத்து எல்லையில் உள்ளது. யாரோ வெளியில் இருந்து டூ வீலர்களிலும், ஆட்டோக்களிலும் இரவு நேரத்தில் குப்பை மூட்டைகளை கொண்டுவந்து இப்பகுதியில் வீசி செல்கின்றனர்.

அங்கு குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று மாநகராட்சி மூலம் போர்டு வைக்கப்பட்ட பிறகும், அங்கு அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மிகுந்த சுகாதாரக் கேடு விளைவிக்கிறது. திருச்சி பகுதியில் இருந்து நாமக்கல் மாநராட்சி எல்லைக்குள் நுழையும்போதே குப்பை மலையைக்காணும் அனைவருக்கும், குப்டைபயில்லா நகராட்சியாக விருதுபெற்ற நாமக்கல் மாநகராட்சியில் குப்பை மலை உருவானது எப்படி என்ற கருத்து தோன்றுகிறது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு நாமக்கல் மாநகராட்சி மற்றும் வகுரம்பட்டி பஞ்சாயத்து நிர்வாகத்தினர், திருச்சி மெயின்ரோட்டில் சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் குப்பை மலையை சுத்தம் செய்து, அங்கு குப்பை கொட்டுவோரை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story