புதிய நலத் திட்டங்களில் பயனடைய தொழிலாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு

பைல் படம்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட தொழிலாளர் (அமலாக்கம்) உதவி கமிஷனர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு புதிய நலத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 29ம் தேதி நடைபெற்ற 78-வது வாரிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசு அங்கீகாரம் பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்குத் தையல் இயந்திரம் வாங்குவதற்கு உதவித்தொகை வழங்குதல். உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் எழுதும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குப் பயிற்சி உதவித்தொகை வழங்குதல் போன்ற உதவிகள் வழங்கப்படுகிறது.
இந்த புதிய நலத் திட்டங்களில் பயனடையத் தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தொழிலாளியின் மாத சம்பள உச்ச வரம்பு அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து ரூ.25 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்குச் செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரியிலோ இ-மெயில் அல்லது தொலைப்பேசி மூலமோ தொடர்புகொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu