தமிழக அரசின் சிறந்த நடைமுறை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

பைல் படம் : தமிழக அரசின் சிறந்த நடைமுறை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
நாமக்கல்,
தமிழக முதலமைச்சரின் சிறந்த நடைமுறை விருது பெற, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழக முதலமைச்சரின் சிறந்த நடைமுறை விருதிற்கு, புதுமையான திட்டங்களை செயல்படுத்துதல், உணரக்கூடிய அமைப்பு ரீதியான மாற்றங்களைக் கொண்டு வருதல் மற்றும் நிறுவன அமைப்பை உருவாக்குதல், பொது விநியோக அமைப்புகளை திறமையான, பயனுள்ள மற்றும் நெறிமுறையாக மாற்றுதல், வெள்ளம், நிலநடுக்கம், பெரிய விபத்துக்கள் போன்ற பேரிடர் சூழ்நிலைகளில் சிறந்த செயல்திறன், சேவைகளின் தரம் மற்றும் தொடர்ச்சிகளை நிலையானதாக அமைத்தல், முன்னேற்றம் போன்ற பன்முகதிறமை புரிந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் அவார்ட்ஸ்.டிஎன்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட்டில் மட்டுமே ஆன்லைனில், நாளை 12ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் இவ்விருது தொடர்பான விபரங்களுக்கு, கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu