நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சாமி கோயில் உண்டியல்கள் திறப்பு

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சாமி கோயில்  உண்டியல்கள் திறப்பு
X

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் ரூ.52 லட்சம் காணிக்கையாக பெறப்பட்டது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ நரசிம்மர் திருக்கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் 10-க்கும் மேற்பட்ட உண்டியல்கள் உள்ளன. 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கை எண்ணப்பட்டு கணக்கீடு செய்யப்படும்.

கடந்த 3 மாதங்களுக்குப் பிறகு தற்போது உண்டியல்கள் திறக்கப்பட்டு, அண்ணதான மண்டபத்தில் பக்தர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் உண்டியல்களில் ரொக்கம் ரூ.34 லட்சத்து 16 ஆயிரம், தங்கம் 26 கிராம், வெள்ளி 98 கிராம் ஆகியன பக்தர்களின் காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளது. ஸ்ரீ நரசிம்மர் கோயிலில் ரொக்கம் ரூ. 17 லட்சத்து 93 ஆயிரம், தங்கம் 18 கிராம், வெள்ளி 145 கிராம் ஆகியவை பக்தர்களின் காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!