நாமக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விலங்கின நோய் தடுப்பு விழிப்புணர்வு விழா
எலி, நாய், பூனை, பன்றி, குரங்கு மற்றும் காட்டு விலங்குகளால் மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக எலிக்காயச்சல் எனப்படும் லெப்டோ ஸ்பைரோசிஸ், ஸ்குரப் டைபஸ், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், ரேபிஸ், ஆந்த்ராக்ஸ் போன்ற கொடிய நோய்கள் விலங்குகளில் இருந்து, மனிதர்களுக்கு பரவுகின்றன.
இதுகுறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 6ம் தேதி விலங்குகளால் பரவும் நோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாமக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
எர்ணாபுரம் கால்நடை ஆஸ்பத்திரி டாக்டர் வெள்ளைச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, விலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள், அதன் தடுப்பு முறைகள் குறித்து விளக்கி கூறினார். வீடுகளில் வளர்க்கப்படும் நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விளக்கி கூறினார்.
இதேபோல், எர்ணாபுரம், கோனூர், திண்டமங்கலம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் உலக விலங்கின நோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. எர்ணாபுரம் பஞ்சாயத்து தலைவர் மாரப்பன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் செல்வம், சரவணன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜகணபதி, முகமது ரபி, இளங்கோவன், பெரியசாமி, ஜெயக்கண்ணன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu