இன்று முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க கலெக்டர் வேண்டுகோள்

இன்று முதல் வாக்காளர் பட்டியலுடன்  ஆதார் எண்ணை இணைக்க கலெக்டர் வேண்டுகோள்
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  ஸ்ரேயா சிங்.

இன்று முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க நாமக்கல் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று முதல் பொதுமக்கள் தங்களின் வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண்ணை ஆன்லைன் மூலம் இணைத்துக்கொள்ளலாம்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

இந்திய தேர்தல் கமிஷன், வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலுடன், தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை இணைப்பதற்காக இன்று 15ம் தேதி முதல் ஆன்லைன் மூலம், https://www.nvsp.in > https://voterportal.eci.gov.in ஆகிய வெப்சைட் முகவரிகள் மற்றும் voter helpline செல்போன் அப்ளிகேஷன் மூலம் இணைத்துக்கொள்ளலாம். மாவட்டந்தோறும் முதலில் பதிவேற்றம் செய்யும் 1000 பேருக்கு, இ-சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. எனவே, நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளர்களும் ஆன்லைன் மூலம் தங்கள் விபரங்களை அப்லோட் செய்து, ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம். மேலும், https://elecions.tn.gov.in/getacertificate என்ற வெப்சைட் முகவரியில் தங்களின் இ-சான்றிதழை டவுன்லோடு செய்து மாவட்டத்திற்கு நற்பெயரை பெற்றுத்தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil