அதிமுகவின் 50வது ஆண்டு விழா: நாமக்கல் நகர கட்சியினர் கொண்டாட்டம்

அதிமுகவின் 50வது ஆண்டு விழா: நாமக்கல் நகர கட்சியினர் கொண்டாட்டம்
X

நாமக்கல்லில் நடைபெற்ற அதிமுகவின் 50வது ஆண்டு விழாவில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கினார்.

நாமக்கல் நகர அதிமுக சார்பில் கட்சியின் 50வது ஆண்டு விழா நடைபெற்றது.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1972 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி அதிமுக என்ற அரசியல் கட்சி துவங்கப்பட்டது. இந்த கட்சி தொடங்கப்பட்டு 49 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நேற்று முதல் 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. அதிமுகவின் பொன்விழாவை நடப்பாண்டு முழுவதும் கொண்டாட அந்த கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது.

அதன்படி நாமக்கல்லில் நகர அதிமுக சார்பில் 50வது பொன்விழா ஆண்டு விழா பரமத்தி ரோட்டில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் மயில்சுந்தரம், முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் சேகர், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ராஜா, நகர துணை செயலாளர்கள் நரசிம்மன், சன்பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் ராஜா வரவேற்றார்.

விழாவில் நாமக்கல் நகர செயலாளர், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் தலைமை வகித்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதனையடுத்து நாமக்கல் மெயின் ரோட்டில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர கூட்டுறவு வங்கி தலைவர் கண்ணன், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவர் சாதிக் பாட்ஷா, வகுரம்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராஜா ரகுமான், நாமக்கல் நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் விஜயபாபு, நாமக்கல் வட்டார வீட்டு வசதி சங்க தலைவர் கமால்பாஷா, அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் குமுதம் நாகராஜன்,நாமக்கல் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் லியாகத் அலி, 4 வது வார்டு செயலாளர் சரவணன், நகர சிறுபான்மையினர் செயலாளர் ராஜா ஷாஜகான், தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் சிவலிங்கம், நல்லிபாளையம் பிஏசிபி தலைவர் விஜயகுமார், முன்னாள் நகர செயலளர் ஆட்டோராஜா, சுமதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!