பிரசவம் முடிந்ததும், குழந்தையை ஆஸ்பத்திரியில் விட்டு கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதிய மாணவி !

பிரசவம் முடிந்தவுடன், கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதிய மாணவி வர்ஷினி.
நாமக்கல்,
நாமக்கல்லில் ஆஸ்பத்திரியில் பிரசவம் முடிந்ததும், கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதிய மாணவியின் தன்னம்பிக்கைக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வர்ஷினி. திருமணமான வர்ஷினி தனது கணவருடன் வசித்து வருகிறார். அவர் நாமக்கல் டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு எம்.எஸ்.சி (இயற்பியல்) படித்து வருகிறார். கல்லூரியில் தற்போது பெரியார் பல்கலைக்கழக தேர்வுகள் நடைபெற்று வருகிறது. நிறைமாத கர்ப்பிணியான வர்ஷினி நேற்று முன்தினம் தேர்வு எழுத வந்திருந்தார். பின்னர் வீட்டிற்கு சென்ற அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவரது பெற்றோர் அவரை, நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் பிரசவத்திற்காக அனுமதித்தினர். அதிகாலை 4 மணிக்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் குழந்தையை ஆஸ்பத்திரியில், அவரது கணவர் மற்றும் பெற்றோர் கண்காணிப்பில் விட்டுவிட்டு, நேற்று கல்லூரிக்கு வந்து பல்கலைக்கழக தேர்வை வர்ஷினி எழுதினார். தேர்வு முடிந்த பின்புற அவர் மகிழ்ச்சியுடன் ஆஸ்பத்திரிக்கு திரும்பிச் சென்று தனது குழந்தையை கவனித்துக்கொண்டார். பிரசவம் நடைபெற்றவுடன், கல்லூரிக்கு வந்து பல்கலை. தேர்வு எழுதிய மாணவி வர்ஷினியின் மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் சக மாணவிகள் பாராட்டினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu