சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குவோர் மீது நடவடிக்கை: கலெக்டரிடம் புகார்

சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குவோர்    மீது நடவடிக்கை: கலெக்டரிடம் புகார்
X

சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குவதை தடை செய்யக்கோரி அகில இந்திய மோட்டார் வாகன மக்கள் கட்சியினர் மனு அளிப்பதற்காக நாமக்கல் கலெக்டர் ஆபீசிற்கு வந்தனர்.

சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அகில இந்திய மோட்டார் வாகன மக்கள் கட்சியினர் நாமக்கல் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நாமக்கல்,

இதுகுறித்து அகில இந்திய மோட்டார் வாகன கட்சியினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசிடம் தனியார் மோட்டார் கார் அனுமதி பெற்று சொந்த தேவைக்கு வாங்கிய பல வாகனங்களை வாடகைக்கு இயக்கி வருகின்றனர். சிலர் அண்டை மாநில பதிவெண் கொண்ட கார்களை வாங்கி பெயர் மாற்றம் செய்யாமலும் வாடகைக்கு இயக்குகின்றனர். இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து பல முறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்கும் சமயத்தில் மட்டும் கண்துடைப்புக்காக அதிகாரிகள் வாகனத் தணிக்கை மேற்கொண்டு விதிமுறை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். அதன்பின் கண்டு கொள்வதில்லை. அதேவேளையில் விதிமுறை மீறி இயக்கப்படும் வாகனங்களால், முறையாக அரசுக்கு வரி செலுத்தி டாக்சி பர்மிட் பெற்று வாடகைக்கு வாகனங்களை இயக்குவோர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்களில் வீல் பேஸ் அடிப்படையில் இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story