நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா
X

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் நினைவு இல்லத்தில் நடைபெற்ற, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் நினைவு இல்ல நூலகத்தில் அப்துல்கலாமின் 90வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் நினைவு இல்ல நூலக வாசகர் வட்டம், நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை சார்பில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாமின் 90வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் டாக்டர் மோகன் தலைமை வகித்தார். நூலகப் புரவலர் கண்ணன், கணேசன், ரவி, கமால்பாஷா, முருகேசன், விஜய்ஆனந்த், ராஜ்குமார் உள்ளிட்டோர் டாக்டர் அப்துல்கலாமின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். முடிவில் நூலகர் செல்வம் நன்றி கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!