நாமக்கல் அருகே ரோட்டில் சென்றுகொண்டிருந்த கார் திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது

நாமக்கல் அருகே ரோட்டில் சென்றுகொண்டிருந்த ஆம்னி கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
நாமக்கல்,
நாமக்கல் அருகே ரோட்டில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது.
நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் ஒன்றியம், கண்ணூர்பட்டியை சேர்ந்தவர் வினோத் (30) மெக்கானிக். நேற்று பகல் 11 மணியவளில் அவருக்கு சொந்தமான ஆம்னி காரை டிஙகரிங் வேலைக்காக, பட்டறைக்கு டிரைவர் யுவராஜ் (27) என்பவர் ஓட்டிச்சென்றார். நாமக்கல் & சேலம் பை&பாஸ் ரோட்டில் தனியார் கல்லூரி அருகே சென்றபோது ஆம்னி வேனின் பின்புறம் இருந்து புகை வந்துள்ளது. இதைக்கண்ட டிரைவர் யுவராஜ் வேனை ஓரமாக நிறுத்துவிட்டு, அதில் இருந்து இறங்கினார். அப்போது, வேன் திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத்துவங்கியது.
தகவல் கிடைத்ததும், விரைந்துவந்த நாமக்கல் தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து, மேலும் தீ பரவாமல் தடுத்தனர். இருந்தும் இந்த தீ விபத்தில் ஆம்னி கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் தொடர்பாக, நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஒயரிங் பழுது காரணமாக ஆம்னி வேன் தீப்பிடித்தது தெரியவந்துள்ளது. புகை வந்தபோதே காரை நிறுத்திவிட்டு, டிரைவர் வெளியேறிதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu