லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை உதவி கமிஷனர், செயல் அலுவலர் சஸ்பெண்ட்

லஞ்சம் வாங்கிய  அறநிலையத்துறை  உதவி கமிஷனர், செயல் அலுவலர் சஸ்பெண்ட்
X
கோவில் பூசாரியிடம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை உதவி கமிஷனர், செயல் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை கண்டு பிடித்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து தண்டனை வாங்கி கொடுப்பதற்கு என்றே தமிழகஅரசின் காவல் துறையில் ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை என தனியாக ஒரு துறை செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு காவல் துறை லஞ்சம் ஒழிப்பு காவல் துறை லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை கைது செய்த வருகிறது.

அரசு ஊழியர்கள் மட்டும்இன்றி அரசு பதவியில் இருக்கும் அமைச்சர், எம்பி எம்எல்ஏ, போன்ற அரசு ஊழியர்களும் லஞ்சம் வாங்கினாலோ அல்லது ஊழல் செய்தாதோ லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அதிகாரம் உள்ளது.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், முத்துகாப்பட்டி பெரியசாமி கோவில் பூசாரி அண்ணாதுரையிடம், அவருக்கு கோயிலில் பூஜை செய்யும் பணி வழங்குவதற்காக, நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலர் லட்சுமி காந்தன், உதவி கமிஷனர் ரமேஷ் ஆகிய இருவரும், வாரத்திற்கு ரூ.21 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.

மாமூல் கொடுக்க விரும்பாத அண்ணாதுரை, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைபடி, கடந்த 27ம் தேதி, லஞ்சப் பணத்தை அண்ணாதுரை எடுத்து சென்றார். உதவி கமிஷனர் ரமேஷ் கூறியபடி, ஏளூரில் உள்ள லட்சுமிகாந்தனிடம் அண்ணாதுரை பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லட்சுமி காந்தனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, உதவி கமிஷனர் ரமேசையும் கைது செய்தனர்.

அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உதவி கமிஷனர் ரமேஷ் மற்றும் லட்சுமி காந்தன் ஆகிய இருவரும் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தது பற்றிய இந்து சமய அறநிலைய துறை உயர் அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் அளித்தனர்.

இந்த தகவல் வந்து சேர்ந்ததும் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுபற்றி உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பின்னர் நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலர் லட்சுமி காந்தன், உதவி கமிஷனர் ரமேஷ் ஆகிய இருவரையும் அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

லஞ்சம் வாங்கிய இந்த இரு அதிகாரிகளும் இனி அவர்கள் மீதான வழக்கில் இருந்து விடுதலையாகும் வரைகோவில் பணி செய்ய முடியாது. அவர்கள் இந்த வழக்கில் தண்டனை அடைந்தால் சிறைக்குசெல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் பணியாற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!