நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வில் 94.52 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில் 19வது இடம்

நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வில் 94.52 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில் 19வது இடம்
X

நாமக்கல் மாவட்ட 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை கலெக்டர் உமா வெளியிட்டு, சிஇஓ மாதேஸ்வரியிடம் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 94.52 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 19வது இடத்தைப் பெற்றுள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 94.52 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 19வது இடத்தைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை கலெக்டர் உமா வெளியிட்டு, சிஇஓ மாதேஸ்வரியிடம் வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம் 295 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 18,764 மாணவ மணவிகள் தேர்வு எழுதினார்கள். இவர்களில், 17,736 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1,028 பேர் தேர்ச்சி பெறவில்லை. மொத்த தேர்ச்சி சதவீதம் 94.52 ஆகும். மாநில சராசரி தேர்ச்சி சதவீதம் 93.80 ஆகும். கடந்த ஆண்டு நாமக்கல் பெற்ற 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 93.51 ஆகும். கடந்த ஆண்டை விட 1.01 சதவீதம மாணவர்கள் இந்த ஆண்டு அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவிலான மொத்த தேர்ச்சி சதவீதத்தில் கடந்த ஆண்டு 14வது இடத்தில் இருந்த நாமக்கல் மாவட்டம், இந்த ஆண்டு 19வது இடம் பெற்றுள்ளது.

Next Story
application of ai in agriculture