நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 6 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு: கலெக்டர் தகவல்

பைல் படம்.
இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் சங்கர் தலைமையில், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர் ஆண்டனி, தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் விஜய், மோகன், கோமதி, மாலா மற்றும் சைல்டு லைன் பணியாளர்கள் கொண்ட குழுவினர் கடந்த 9ம் தேதி குழந்தை தொழிலாளர் தொடர்பாக திடீர் ஆய்வுகள் நடத்தினர்.
இதில் நாமக்கல், சேலம் மெயின் ரோடு, கொசவம்பட்டி மற்றும் கூலிப்பட்டி ஆகிய இடங்களிலிருந்து 3 வடமாநில குழந்தை தொழிலாளர்களும், நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 3 சிறுவர்கள் என மொத்தம் 6 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
மேலும் அவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும், குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும்.
குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தும் நிறுவன உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களுக்கு ரூ.20 ஆயிரம்-முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் வழங்கப்படும். எனவே தொழில் நிறுவன உரிமையாளர்கள் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதைக் கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu