திருச்சியில் 5ம் தேதி வணிகர் சங்க மாநில மாநாடு: நாமக்கல் மாவட்டத்தில் கடைகளுக்கு விடுமுறை

திருச்சியில் 5ம் தேதி வணிகர் சங்க மாநில மாநாடு: நாமக்கல் மாவட்டத்தில் கடைகளுக்கு விடுமுறை
X

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன்.

திருச்சியில் வணிகர் சங்க மாநில மாநாடு நடப்பதை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், வருகிற மே 5ம் தேதி, திருச்சியில், சமயபுரம் டோல் கேட் அருகில் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதையொட்டி வரும் 5ம் தேதி தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் மொத்தம் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்கின்றனர்.

மாநாட்டை முன்னிட்டு 5ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில், 45 இணைப்பு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்துகொள்ள உள்ளனர். நடைபெற உள்ள, 39வது மாநில மாநாடு, வணிக வரலாற்றின் திருப்பு முனையாக நிச்சயம் அமையும் என்ற உறுதியோடு, இதனை குடும்ப விழாவாக கருதி, அனைத்து வணிகர்களும், மே 5 கடைகளுக்கு விடுமுறை அளித்து குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!