தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத வேலை வாய்ப்பு

தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத வேலை வாய்ப்பு
X

பைல் படம்.

தனியார் நிறுவனங்களில் குறைந்தது 5 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்களில் மொத்தம் உள்ள தொழிலாளர்களில் குறைந்தது 5 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டத்தில், 20 மற்றும் அதற்கு மேல் பணியாளர்களை பணியமர்த்தியுள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும், சட்டப்பட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பை உருவாக்க வேண்டும். அவர்களுக்கான பணியிடங்களை கண்டறிந்து, குறைந்தது 5 சதவீதம் வேலைவாய்ப்பு மற்றும் பணி நியமனம் வழங்க வேண்டும். 20 பேருக்கு மேல் பணியாளர்களை பணியமர்த்தியுள்ள அனைத்து நிறுவனங்களும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் வெப்சைட்டில் உள்ள, கூகுள் ஷீட் படிவத்தில் உள்ள விபரங்களை பூர்த்தி செய்து, 2 நாட்களில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை கமிஷனருக்கு அனுப்ப வேண்டும்.

தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆய்வின்போது, மாற்றுத் திறனாளிகள் நிறுவனங்களை அணுகுவதற்கான சாய்வு தளம், வாகன நிறுத்துமிடம், கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிடில், ஆய்வறிக்கையை பூர்த்தி செய்து அந்நிறுவனத்திற்கு வழங்கும் ஆய்வு உத்தரவில் இதை தெரியப்படுத்த வேண்டும்.

அதிக மாற்றுத் திறனாளிகளை பணியமர்த்தியுள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகளுக்கு, சுதந்திர தினவிழாவில், தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட கலெக்டரால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!