ரூ.1.20 கோடி மதிப்பில் 5 புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள்: எம்.பி., திறந்து வைப்பு

நாமக்கல் மாவட்டம் பொன் பரப்பிப்பட்டியில் புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையத்தை, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் திறந்து வைத்தார், அருகில் கலெக்டர் உமா.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட, வெண்ணந்தூர் ஒன்றியம் பொன்பரப்பிப்பட்டி, ராசிபுரம் ஒன்றியம் கூனவேலம்பட்டி, புதுச்சத்திரம் ஒன்றியம், தாத்தையங்கார்பட்டி, காரைக்குறிச்சி மற்றும் அக்கியம்பட்டி ஆகிய பகுதிகளில், ரூ. 1.20 கோடி மதிப்பில், 5 புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பால் குளிரூட்டும் மையங்களை திறந்து வைத்து, 15 சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியதாவது:
தமிழக முதல்வர், ஆட்சிப்பொறுப்பேற்ற பின், 4 ஆண்டுகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும், அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். தற்போது, தனியார் நிறுவனங்களை காட்டிலும், ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனம், படிப்படியாக வளர்ச்சி பெற்று வருகிறது.
அதன் அடிப்படையில், மாவட்டத்தில், ரூ. 1.20 கோடி ரூபாய் மதிப்பில் 5 இடங்களில், புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களை திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாளை மேலும், 3 இடங்களில் புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களை திறந்து வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் பால் கொள்முதல் நேரம் அதிகரிக்கும், விவசாயிகள் தங்கள் நேர வசதிக்கு ஏற்ப பாலை சங்கத்தில் வழங்கலாம். இங்கு குளிரூட்டும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால், பால் குளிரூட்டப்பட்டு பாதுக்காக்கப்படும். இச்சங்கத்தில் பால் கொள்முதல் 2,000 லிட்டர் வரை அதிகரிக்கும். காலை நேரங்களில், 10:00 மணீ வரையும், மாலை 6:00 முதல், இரவு 9:00 மணி வரையும் பாலை சங்கத்தில் வழங்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, 2024&25ம் ஆண்டில், அதிகளவில் பால் உற்பத்தி செய்து வழங்கிய, முதல் 3 சிறந்த பால் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 15 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அட்மா குழுத்தலைவர்கள் துரைசாமி, ஜெகநாதன், ஆவின் பொது மேலாளர் சண்முகம், துணை பதிவாளர் சண்முகநதி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகெண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu