3,566 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஆன்லைன் மூலம் சுழற்சி முறையில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு ஒதுக்கீடு!

3,566 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஆன்லைன் மூலம்  சுழற்சி முறையில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு ஒதுக்கீடு!
X

பட விளக்கம் : நாமக்கல் மாவட்டத்தில், சட்டசபை தொகுதி வாரியாக ஆன்லைன் முறையில் ஒதுக்கீடு செய்ய்ப்பட்ட, எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மாவட்ட கலெக்டர் உமா, மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர் ஆகியோர் முன்னிலையில், சம்மந்தப்பட்ட சட்டசபை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

3,566 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஆன்லைன் மூலம் சுழற்சி முறையில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3,566 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஆன்லைன் மூலம் சுழற்சி முறையில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு ஒதுக்கீடு

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளுக்கும், 3,566 எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஆன்லைன் மூலம் மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், லோக்சபா தேர்தலில், மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்துவதற்கான கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பகிர்ந்து அளிப்பதற்காக இண்டர்நெட் மூலம், ஆன்லைன் முறையில் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்தார். தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர்.

மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலு?ர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய, 6 சட்டசபை தொகுதிகளில், 19ம் தேதி ஓட்டுப்பதிவு அன்று பயன்படுத்த, 1,628 ஓட்டுச்சாவடிகளில், 4,884 எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தயார் நிலையில் 1,130 இயந்திரங்கள் என, மொத்தம் 6,014 இயந்திரங்கள் முதற்கட்டமாக ஆன்லைன் மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இயற்கையின் மடியில் ஒருநாள் உல்லாசப் பயணத்தை மேற்கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியென்றால் நீலகிரி மாவட்டத்தில், அடர்ந்த காடுகளும், வன விலங்குகளும், பசுமையான தேயிலைத் தோட்டங்களும் நிறைந்த அழகிய சுற்றுலாத்தலமான மசினகுடி உங்களுக்கானது தான்.

நாமக்கல் லோக்சபா தொகுதியில், 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதையடுத்து, ஓட்டுப்பதிவிற்கு கூடுதலாக பயன்படுத்தப்படவுள்ள எலக்ட்ரானிக் இயந்திரங்கள் பகிர்ந்தளிப்பதற்காக, இண்டர்நெட் மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.

அதன்படி, ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு 626, சேந்தமங்கலம் தொகுதிக்கு 680, நாமக்கல் தொகுதிக்கு 692, பரத்தி வேலூர் தொகுதிக்கு 608, திருச்செங்கோடு தொகுதிக்கு 626, குமாரபாளையம் தொகுதிக்கு 334 என, மொத்தம் 3,566 எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஆன்லைன் மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 6 சட்டசபை தொகுதிகளில், 5,516 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 1,950 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,114 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. சட்டசபை தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் சம்மந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாதவன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!