நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று
X
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 25 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், கொல்லிமலை, பரமத்திவேலூர், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று 20 ம் தேதி மொத்தம் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், கோவை மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67,855 பேர், மாவட்டத்தில் இன்று 98 பேர் சிகிச்சை குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் 66,887 பேர். தற்போது மொத்தம் 435 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 533 ஆக உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்