அரசு பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு 22,000 செட் இலவச சீருடை தயார்

அரசு பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு படிக்கும் ஏழை    மாணவர்களுக்கு 22,000 செட் இலவச சீருடை தயார்
X

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 2ம் கட்டமாக 22,000 செட் இலவச சீருடைகள், நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும், 6 முதல், 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக, 22,000 செட் சீருடைகள், நாமக்கல் மாவட்ட சிஇஓ மூலம் தருவிக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்,

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக, பள்ளிக் கல்வித்துறை பல்வேறு சலுகைகள், நலத்திட்டங்களை இலவசமாக வழங்குகின்றன. தமிழகத்தில், 1 முதல், 8ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச சீருடைகள் வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையான மாணவ மாணவிகளுக்கு, ஆண்டுக்கு தலா 4 செட் சீருடை வழங்கப்படுகிறது. இதற்காக மாணவ, மாணவிகளின் வயதுக்கு ஏற்ற அளவுகளில் தயாரித்து வழங்கப்படுகிறது. இந்த சீருடை துணிகள், சமூநலத்துறை மூலம் மகளிர் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் மூலம் தைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், மகளிர் குழுவினர் தயாரித்த 22,000 செட் இலவச சீருடைகள் ஏற்கனவே நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு தருவிக்கப்பட்டது. அவற்றை, பணியாளர்கள் சரிபார்த்து இருப்பு வைத்தனர். தற்போது 6 முதல் 8 ம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு, 2 ஆம் கட்டமாக, 22,000 சீருடைகள் தருவிக்கப்பட்டது. இந்த சீருடைகள், பள்ளிகள் திறந்ததும், அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும், 6 முதல் 8 ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

Next Story