நீதிமன்ற வழக்கு தீர்வுக்குப்பின் கால்நடைத்துறையில் 1,500 பணியிடங்கள்: அமைச்சர்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாமக்கல் வருகைதந்தார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், கோழிப்பண்ணைகளில், சிறு சிறு வேலைகளை மேற்கொள்ளும் வகையில், அலைடு பயிற்சி பெறும் வகையில், கால்நடை மருத்துவக்கல்லூரியில் பாடப்பிரிவுகள் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதையொட்டி, இந்த ஆண்டிலேயே பல்வேறு சர்ட்டிபிகேட் கோர்ஸ் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆட்சியில், சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்பட்ட கால்நடை பூங்கா திட்டம், முந்தைய அரசு அவசர கோலத்தில் திறக்கப்பட்டது. அங்கு போதுமான தண்ணீர் வசதியில்லை. அங்கு தண்ணீர் தேவைக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. அந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தி உள்ளனர். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடத்தி, தலைமை செயலர் தலைமையில், அந்த கல்லூரிக்கு தேவையான, திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தி உள்ளார். அவற்றை நடைமுறைப்படுத்த உள்ளோம்.
கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசிக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை. மத்திய அரசுதான் கோமாரி தடுப்பூசி தரவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான கோமாரி தடுப்பூசி ஒட்டு மொத்தமாக பெறப்பட்டுள்ளது. கால்நடை துறையில் காலியாக உள்ள 1,500 பணியிடங்கள் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் உரிய தீர்வு கண்ட பின் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இலங்கை அரசால், தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது தொடர்பாக, மத்திய அரசிடம் கடிதம் மூலமாக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu