நாமக்கல்: போர்க்கால அடிப்படையில் மருத்துவ உதவிகள் -அமைச்சர் மதிவேந்தன் தகவல்

நாமக்கல்: போர்க்கால அடிப்படையில் மருத்துவ உதவிகள் -அமைச்சர் மதிவேந்தன் தகவல்
X

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் செயல்பட்டு வரும் கொரோனாகட்டுப்பாட்டு அறையை (வார் ரூம்) சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் பார்வையிட்டுஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் மெகராஜ்.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான உதவிகள்போர்க்கால அடிப்படையில் செய்யப்படுகின்றன என்று அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான உதவிகள்போர்க்கால அடிப்படையில் செய்யப்படுகின்றன என்று அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டு அறையை (வார் ரூம்) தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கலெக்டர் மெகராஜ் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது பதிவேடுகளில் குறித்து வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்புகளின் விவரங்களையும், நோயாளிகளின் தொலைபேசி அழைப்பின் பேரில் அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில்படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதையு அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், காய்ச்சல், சளி, இருமல் உடல்வலி உள்ளிட்ட எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது வீட்டில் தனிமைப்படுத்துதல் பற்றிய விபரங்கள் மற்றும் சிகிச்சை முறைகள், நோயாளிகளின் வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள கொரோனா கவனிப்பு மையங்கள், படுக்கை வசதி, நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் காரணத்தினால் ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை விபரங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ள வசதியாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த கட்டளை மையம் (வார் ரூம்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களிலிருந்து கொண்டு வரப்படும் ஆக்சிஜன் அளவு மற்றும் சிலிண்டர்கள் விவரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் நாமக்கல் அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரி , அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பயன்பாட்டிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், உயிர் காக்கும் மருந்துகள் விவரங்கள் தொகுத்து தலைமைக் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பப்பட்டு, அதன் அடிப்படையில் மாவட்டத்திற்கு தேவையான பொருட்கள் பெறப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மையத்திற்கு (வார் ரூம்) 1077, 04286-281377, 04286-299137, 04286-299139, 82204 02437, 93423 12761 மற்றும் 93423 12596 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு, கொரோனா நோய் சிகிச்சை வசதி தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். இந்த மையத்தில் டாக்டர்கள், சுகாதாரப்பணியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவைப்படும் உதவிகளை போர்க்கால அடிப்படையில் ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றனர் என்று கூறினார். நிகழ்ச்சியில் கொரோனா நன்கொடையாளர் ராஜேஷ்குமார், பிஆர்ஓ சீனிவாசன், சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் ரமேஷ், டாக்டர்கள் பாலாசத்தியநாரயணன், அருண்பாரதி, சதிஷ்குமார், ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!