கஞ்சா போதையில் மகளிர் விடுதிக்குள் நுழைய முயன்ற இளைஞன்

கஞ்சா போதையில் மகளிர் விடுதிக்குள் நுழைய முயன்ற இளைஞன்
X
நாமக்கல்லில் கஞ்சா போதையில் வந்த இளைஞர் பெண்கள் விடுதிக்குள் நுழைய முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் காந்தி நகர் பகுதியில் அரசு பெண்கள் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு இன்று காலை அறை நிர்வாணமாக வந்த இளைஞர் ஒருவர் உள்ளே நுழைய முற்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் அந்த இளைஞனை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கஞ்சா போதையில் அப்பகுதியில் உள்ளவர்களின் வீடுகளுக்கு நுழைய முற்பட்டது தெரியவந்தது. அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு மாவட்டத்தில் தொடங்கிய  மஞ்சள் அறுவடை..! இருப்பு வைக்கவும்,விற்கவும்  யோசனை!