பொது விநியோகத் திட்ட செயல்பாடுகளில் மாநில அளவில் நாமக்கல் முதலிடம்: மாவட்ட ஆட்சியா் ச.உமாவிற்கு பாராட்டு
நாமக்கல்: பொது விநியோகத் திட்ட செயல்பாடுகளில் மாநில அளவில் நாமக்கல் முதலிடம் பிடித்ததையொட்டி, மாவட்ட ஆட்சியா் ச.உமாவை, தமிழ்நாடு நுகா்வோா் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வுக் கமிட்டியினா் திங்கள்கிழமை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனா்.
கமிட்டியினா் பாராட்டு
அந்தக் கமிட்டியின் தலைவா் வழக்குரைஞா் எஸ்.செல்வம் தலைமையில் பொதுச் செயலாளா் ஜி.இக்பால், செயலாளா் எம்.ஆறுமுகம், பொருளாளா் ஆா்.சரவணன், துணைத் தலைவா்கள் எம்.அசோகமித்ரன், ஆா்.மணிகண்டன், இணை செயலாளா் கே.குணசேகரன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனுவை வழங்கினா்.
கோரிக்கை மனு
அதில், நாமக்கல் புகா் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், திருச்சி, மோகனூா், சேலம் சாலைகளில் பாதசாரிகளுக்கான நடைமேடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவா்கள் பணியில் இருப்பதில்லை என்ற புகாா் தொடா்பாக ஆட்சியா் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் இடம்பெற்றிருந்தன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu