பகுதி நேர வேலை என கூறி, 17.45 லட்சம் ரூபாய் மோசடி

பகுதி நேர வேலை எனக்கூறி தி.கோடு பெண்ணிடம் ரூ.17.45 லட்சம் மோசடி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த இல்லத்தரசி கோவிந்தராஜ் மனைவி கீர்த்தனா (29) என்பவர் சைபர் மோசடியால் ரூ.17.45 லட்சத்தை இழந்துள்ளார். சில நாட்களுக்கு முன் அவரது மொபைலுக்கு வந்த அழைப்பில் பேசிய மர்ம நபர், ஆன்லைனில் எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் பகுதி நேர வேலை இருப்பதாகவும், அத்தகைய டாஸ்க்களில் வெற்றி பெற்றால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். முதலில் சிறிய அளவில் லாபத்துடன் பணம் திரும்ப வந்ததால் நம்பிக்கை அடைந்த கீர்த்தனா, 18 தவணைகளாக மொத்தம் ரூ.18,25,451 செலுத்தியுள்ளார். இதில் ரூ.79,871 மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது. மீதமுள்ள ரூ.17,45,580 திரும்ப வராததால் அதிர்ச்சியடைந்த கீர்த்தனா நேற்று நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளார். போலீசாரின் கூற்றுப்படி, இது போன்ற மோசடிகளில் "டாஸ்க்" என கூறி, பிரபல வர்த்தக தளத்தில் ஒரு பொருளை விற்பனை செய்வதற்காக தேர்வு செய்து கிளிக் செய்ய வைத்து, தொடக்கத்தில் சிறிது கமிஷன் வழங்கி நம்பிக்கை ஏற்படுத்திவிட்டு, பின்னர் அதிக தொகையை மோசடி செய்து விடுகின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu