பிரதான குடிநீர் குழாய் சேதம் பள்ளம் தோண்டி விரைவில் சீரமைப்பு..!

பிரதான குடிநீர் குழாய் சேதம் பள்ளம் தோண்டி விரைவில் சீரமைப்பு..!
X
பிரதான குடிநீர் குழாய் சேதம் பள்ளம் தோண்டி விரைவில் சீரமைப்பு.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

பள்ளிப்பாளையம் அடுத்த ஆவத்திபாளையம் பகுதி காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து, பிரதான குழாய் மூலம் திருச்செங்கோடு பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

குடிநீர் குழாயில் உடைப்பு

பள்ளிப்பாளையம் அருகே, ஆசிரியர் காலனி பகுதியில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக சாலையில் ஓடிக்கொண்டிருந்தது.

குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள்

இதையடுத்து, நேற்று மாலை, திருச்செங்கோடு நகராட்சி பணியாளர்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் பள்ளம் தோண்டி, உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்